search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கந்து வட்டி"

    • வட்டி கொடுக்க வேண்டும் என்று தகாத வாா்த்தைகளால் பேசி மிரட்டல் விடுத்ததுள்ளார்
    • புரோ நோட்டில் ரூ.1 லட்சம் என எழுதி வழக்கு தொடுப்பதாக தெரிவித்தார்.

    மூலனூர் :

    திருப்பூா் மாவட்டம் தாராபுரம் வட்டம் மூலனூரை அடுத்த எரிசனம்பாளையத்தை சோ்ந்தவா் ஏ.செந்தமிழ்ச்செல்வன் (வயது 22). இவா் பள்ளபட்டியை சோ்ந்த நிதி நிறுவன அதிபரான ராம்குமாரிடம் கடந்த 7 மாதங்களுக்கு முன்பாக ரூ.10 ஆயிரம் கடனாக பெற்றுள்ளாா்.இதற்காக அசல் மற்றும் வட்டியுடன் சோ்ந்து ரூ.15 ஆயிரம் கட்டியதாக தெரிகிறது.

    இந்நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பாக செந்தமிழ்ச்செல்வனின் வீட்டுக்கு வந்த ராம்குமாா் மேலும் வட்டி கொடுக்க வேண்டும் என்று தகாத வாா்த்தைகளால் பேசி மிரட்டல் விடுத்ததுடன், புரோ நோட்டில் ரூ.1 லட்சம் என எழுதி வழக்கு தொடுப்பதாக தெரிவித்தாராம்.

    இது குறித்து மூலனூா் போலீஸ் நிலையத்தில் செந்தமிழ்ச்செல்வன் புகாா் அளித்துள்ளாா்.புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் ராம்குமாரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

    • டாலர் சிட்டி என்று அழைக்கப்படும் திருப்பூரில் பலதரப்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
    • சமீபத்தில் திருப்பூரில் ஒரு வழக்கு பதியப்பட்டது.

    திருப்பூர்,

    கடலூர், புவனகிரி அருகே கந்து வட்டி கொடுமையால் ஆயுதப்படை போலீஸ்காரர் செல்வக்குமார் தற்கொலை செய்தார். இந்த சம்பவத்தை தொடர்ந்து கந்து வட்டி தொடர்பான அனைத்து வழக்குகளையும் உடனடியாக விசாரிக்க வேண்டும் என்று, டி.ஜி.பி., சைலேந்திரபாபு உத்தரவிட்டார். இதற்காக ஆப்பரேஷன் கந்து வட்டி என்ற சிறப்பு ஆய்வு தொடங்கப்பட்டுள்ளது. மாநகரம், மாவட்டம் வாரியாக உள்ள போலீஸ் நிலையங்களில் கந்து வட்டி தொடர்பான அனைத்து வழக்குகளையும், உடனடியாக விசாரிக்க வேண்டும். நிலுவையில் உள்ள வழக்குக்கு தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

    திருப்பூர் மாநகரம், மாவட்டத்தில் நிலுவையில் உள்ள கந்துவட்டி வழக்கு, போலீஸ் நிலையங்களுக்கு கடன் பிரச்சினை தொடர்பாக வரும் புகார்கள் உள்ளிட்ட அனைத்தையும் போலீசார் முழுமையாக விசாரிக்க துவங்கியுள்ளனர். அதுமட்டுமில்லாமல் கடன் பிரச்சினை தொடர்பாக நிகழும் தற்கொலை சம்பவத்தில், விரிவாக விசாரிக்க ஆரம்பித்துள்ளனர். கடந்த மாதம் அவிநாசியில் தூய்மை பணியாளர் தற்கொலை வழக்கையும் கூடுதல் கவனம் கொண்டு விசாரித்து வருகின்றனர்.டாலர் சிட்டி என்று அழைக்கப்படும் திருப்பூரில் பலதரப்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

    பனியன் தொழில் ரீதியாக அன்றாடம் ஓட்டல் கடை, காய்கறி மார்க்கெட் போன்ற பல வியாபாரங்களுக்கு, வட்டிக்கு பணம் வாங்குவது அதிகம். எனவே அதிக வட்டிக்கு பணம் கொடுப்பவர்களின் விபரங்களை சேகரிக்க துவங்கியுள்ளனர். அவர்கள் மீது ஏதாவது புகார்கள் உள்ளதா என்பதையும் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.கடன் பிரச்சினை தொடர்பாக வரும் புகார்களை அலட்சியம் கொள்ளாமல் போலீசார் விசாரிக்க வேண்டும் என்று மாநகர கமிஷனர் ஏ. ஜி.பாபு, எஸ்.பி., சசாங் சாய் ஆகியோர் உதவி கமிஷனர், டி.எஸ்.பி., - இன்ஸ்பெக்டர்களுக்கு அறிவுறுத்தி உள்ளனர்.

    மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி., சுதாகர் கூறுகையில், கந்து வட்டி தொடர்பான புகார்கள் குறித்து விசாரித்து வருகிறோம். சமீபத்தில் திருப்பூரில் ஒரு வழக்கு பதியப்பட்டது. ஈரோட்டில் கந்து வட்டி தொடர்பாக வழக்கு போடப்பட்டுள்ளது. இப்பிரச்சினை தொடர்பாக பொதுமக்கள் பயப்படாமல் போலீசாரிடம் புகார் தெரிவிக்கலாம். விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    • திருப்பூர் மாநகரம், மாவட்டத்தில் நிலுவையில் உள்ள கந்துவட்டி வழக்கு, போலீஸ் நிலையங்களுக்கு கடன் பிரச்சினை தொடர்பாக வரும் புகார்கள் உள்ளிட்ட அனைத்தையும் போலீசார் முழுமையாக விசாரிக்க தொடங்கி உள்ளனர்.
    • ரூ.5 லட்சம் கடனுக்கு ரூ.27 லட்சம் கேட்பதாக பெண் மீது விவசாயி ஒருவர் கந்துவட்டி புகார் தெரிவித்துள்ளார்.

    திருப்பூர்:

    கடலூர் புவனகிரி அருகே கந்து வட்டி கொடுமையால் ஆயுதப்படை போலீஸ்காரர் செல்வக்குமார் தற்கொலை செய்தார். இந்த சம்பவத்தை தொடர்ந்து கந்து வட்டி தொடர்பான அனைத்து வழக்குகளையும் உடனடியாக விசாரிக்க வேண்டும் என்று தமிழக டி.ஜி.பி., சைலேந்திரபாபு உத்தரவிட்டார்.

    இதற்காக ஆபரேஷன் கந்து வட்டி என்ற சிறப்பு ஆய்வு தொடங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டம் வாரியாக உள்ள போலீஸ் நிலையங்களில் கந்து வட்டி தொடர்பான அனைத்து வழக்குகளையும், உடனடியாக விசாரிக்க வேண்டும். நிலுவையில் உள்ள வழக்குக்கு தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

    இதையடுத்து திருப்பூர் மாநகரம், மாவட்டத்தில் நிலுவையில் உள்ள கந்துவட்டி வழக்கு, போலீஸ் நிலையங்களுக்கு கடன் பிரச்சினை தொடர்பாக வரும் புகார்கள் உள்ளிட்ட அனைத்தையும் போலீசார் முழுமையாக விசாரிக்க தொடங்கி உள்ளனர்.

    இந்தநிலையில் ரூ.5 லட்சம் கடனுக்கு ரூ.27 லட்சம் கேட்பதாக பெண் மீது விவசாயி ஒருவர் கந்துவட்டி புகார் தெரிவித்துள்ளார்.

    திருப்பூர் முதலிபாளையம் அருகே கெங்கநாயக்கன் பாளையத்தை சேர்ந்த விவசாயி கிருஷ்ணமூர்த்தி (வயது 63). இவர் கடந்த 2017-ம் ஆண்டு மொரட்டு பாளையத்தை சேர்ந்த ஒரு பெண்ணிடம் நில ஆவணங்கள், வெற்று காசோலை ஆகியவற்றை அடமானமாக வைத்து ரூ.5 லட்சம் வட்டிக்கு கடன் வாங்கி உள்ளார். 3 சதவீதம் வட்டியுடன் மாதம் ரூ.15 ஆயிரம் செலுத்தி வந்துள்ளார்.

    கடந்த சில நாட்களாக கிருஷ்ணமூர்த்தி பணம் செலுத்தாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த பெண், கிருஷ்ணமூர்த்தியை தகாத வார்த்தையால் திட்டியுள்ளார்.

    இதைத்தொடர்ந்து கிருஷ்ணமூர்த்தி, அந்த பெண்ணிடம் சென்று மீதி பணத்தை மொத்தமாக செலுத்தி ஆவணங்களை மீட்க சென்றுள்ளார்.

    அப்போது ரூ.27 லட்சம் இன்னும் கொடுக்க வேண்டும் என்று அந்த பெண் கூறியதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த கிருஷ்ணமூர்த்தி ஊத்துக்குளி போலீஸ் நிலையத்தில் கந்துவட்டி புகார் அளித்தார். போலீசார் கந்துவட்டி புகார் மீது விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கோவை அதிரடி நடவடிக்கை
    • ஆபரேஷன் கந்துவட்டி வழக்கு பெண் மீது பாய்ந்துள்ளது

    கோவை,

    தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு, ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0-ஐ தொடர்ந்து ஆபரேஷன் கந்துவட்டி எனும் பெயரில் மேலும் ஒரு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    கந்துவட்டி, ஆள் கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்து ஆபரேஷன் கந்துவட்டி மூலம் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் போலீசாருக்கு டி.ஜி.பி உத்தரவிட்டுள்ளார். வெற்று பேப்பரில் கையெழுத்து வாங்குதல், பவர் எழுதி வாங்கி மிரட்டுதல் சொத்து பத்திரங்களை பறிமுதல் செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் டி.ஜி.பி. உத்தரவிட்டுள்ளார்.

    டி.ஜி.பி. உத்தரவை அடுத்து, கந்து வட்டி தொடர்பாக கோவை கெம்பட்டி காலனியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (வயது 34) என்பவர் பெரியகடை வீதி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் சந்திரா என்பவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    புகாரில் கிருஷ்ணமூர்த்தி கூயிருப்பதாவது:-

    நான் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு சந்திரா என்பவரிடம் ரூ.30 ஆயிரம் வட்டிக்கு கடன் வாங்கினேன். சில காரணங்களால் என்னால் 2 மாதம் வட்டி தர முடியவில்லை. இதனால் மீண்டும் அவரிடம் ரூ. 44 ஆயிரம் வாங்கினேன். ஆனால் அவர் பணம் திருப்பி தரும் காலம் முன்னரே ரூ. 44 ஆயிரத்திற்கு கூடுதல் வட்டி கேட்டு ரூ.60 ஆயிரமாக திருப்பி கேட்கிறார். மேலும் எனது குடும்பத்தை தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டுகிறார்.

    இவ்வாறு அவர் அதில் கூறியிருந்தார்.

    இதுகுறித்து விசாரித்த போலீசார் பெண் சந்திரா மீது அதிக வட்டி கேட்டு மிரட்டல் விடுத்தல் பிரிவில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 'ஆபரேஷன் கந்துவட்டி' திட்டத்தை அமல்படுத்த உத்தரவிட்டதையடுத்து முதல் கந்து வட்டி வழக்கு பெண் மீது பாய்ந்துள்ளது.

    • சென்னையில் அனைத்து சட்டம்-ஒழுங்கு உதவி கமிஷனர்களும் கந்துவட்டி தொடர்பான புகார்களை கண்காணித்து அதன் மீது தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
    • கந்து வட்டி புகார்கள் அளிக்கப்பட்டு அதில் உரிய நடவடிக்கை எடுக்காமல் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் உதவி கமிஷனர்களே பொறுப்பு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    கடலூர் மாவட்டம் மதுவானமேடு பகுதியை சேர்ந்தவர் செல்வக்குமார். இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் 10-வது பட்டாலியனில் போலீஸ்காரராக வேலை செய்து வந்தார்.

    இவர் கடலூர் பெரிய நெல்லிக்கொல்லை பகுதியை சேர்ந்த அனிதா என்ற பெண்ணிடம் ரூ.5 லட்சம் கடன் வாங்கி இருந்தார். இந்த பணத்துக்கு கந்து வட்டி கேட்டு மிரட்டல் விடுத்ததால் காவலர் செல்வக்குமார் தற்கொலை செய்து கொண்டார்.

    இதைத்தொடர்ந்து கந்து வட்டி கேட்டு மிரட்டிய அனிதா கைது செய்யப்பட்டார்.

    இதைத்தொடர்ந்து டி.ஜி.பி. சைலேந்திரபாபு, தமிழகம் முழுவதும் கந்து வட்டியை ஒழிக்க அதிரடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இது தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள், போலீஸ் கமிஷனர்கள், ஐ.ஜி.க்கள், டி.ஐ.ஜி.க்கள் உள்ளிட்டோருக்கு அவர் சுற்றறிக்கையை அனுப்பி உள்ளார்.

    அதில் கந்து வட்டி கும்பலை ஒழித்துக்கட்ட மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றி விரிவாக குறிப்பிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து கந்து வட்டி கும்பலை சேர்ந்தவர்கள் மீது போலீசார் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடங்கி உள்ளனர்.

    டி.ஜி.பி.யின் உத்தரவை தொடர்ந்து தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் கந்து வட்டி வேட்டையை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர். ஒவ்வொரு போலீஸ் நிலையங்களிலும் நிலுவையில் உள்ள கந்து வட்டி புகார்களை தூசு தட்டி எடுத்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். இதுபோன்ற புகார்களில் உண்மை தன்மை இருக்கும் பட்சத்தில் கந்து வட்டிக் கேட்டு மிரட்டல் விடுத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    தங்களது பகுதியில் கந்து வட்டிக்கு விடும் நபர்கள் யார்-யார்? என்பதையும் போலீசார் கண்காணித்து வருகிறார்கள். கந்துவட்டி பிரச்சினையால் யாரும் தற்கொலை செய்து கொண்டால் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்துக்குட்பட்ட போலீஸ் அதிகாரிகள் இன்ஸ்பெக்டர் மற்றும் டி.எஸ்.பி.க்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    சென்னையிலும் கந்து வட்டி கும்பலை ஒழித்துக்கட்ட போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். இதன் பேரில் சென்னை மாநகர் முழுவதும் அனைத்து காவல் நிலையங்களிலும் கந்து வட்டி தொடர்பாக பழைய வழக்குகள் இருந்தால் அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கமிஷனர் உத்தரவிட்டு உள்ளார்.

    சென்னையில் அனைத்து சட்டம்-ஒழுங்கு உதவி கமிஷனர்களும் கந்துவட்டி தொடர்பான புகார்களை கண்காணித்து அதன் மீது தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    கந்து வட்டி புகார்கள் அளிக்கப்பட்டு அதில் உரிய நடவடிக்கை எடுக்காமல் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் உதவி கமிஷனர்களே பொறுப்பு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து சென்னையில் உள்ள அனைத்து சட்டம்-ஒழுங்கு உதவி கமிஷனர்கள் கந்து வட்டி விவகாரத்தில் தீவிரம் காட்ட தொடங்கி உள்ளனர்.

    • தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு, ஆப்ரேஷன் கஞ்சா வேட்டை 2.0-ஐ. தொடர்ந்து “ஆபரேஷன் கந்துவட்டி” எனும் பெயரில் மேலும் ஒரு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
    • ‘ஆபரேஷன் கந்துவட்டி’ திட்டத்தை அமல்படுத்த உத்தரவிட்டதையடுத்து, சேலத்தில் முதல் கந்து வட்டி வழக்கு தம்பதி மீது பாய்ந்துள்ளது.

    சேலம்:

    தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு, ஆப்ரேஷன் கஞ்சா வேட்டை 2.0-ஐ. தொடர்ந்து "ஆபரேஷன் கந்துவட்டி" எனும் பெயரில் மேலும் ஒரு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    கந்துவட்டி, ஆள் கடத்தல், நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்து "ஆபரேஷன் கந்துவட்டி" மூலம் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் போலீசாருக்கு டிஜிபி உத்தரவிட்டுள்ளார். வெற்று பேப்பரில் கையெழுத்து வாங்குதல், பவர் எழுதி வாங்கி மிரட்டுதல், சொத்து பத்திரங்களை பறிமுதல் செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் டி.ஜி.பி. உத்தரவிட்டுள்ளார்.

    டி.ஜி.பி. உத்தரவை அடுத்து, கந்து வட்டி தொடர்பாக சேலத்தில் பெண் ஒருவர் கொடுத்த புகாரின்பேரில் தம்பதி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    சேலம், சட்ட கல்லூரி பஸ் நிறுத்தம் அருகே, காவேரி நகரை சேர்ந்தவர் சித்தார்த்தன். இவருடைய மனைவி சுகன்யா ஜோசப் (வயது 36).

    இவர் கந்துவட்டி கொடுமை தொடர்பாக கன்னங்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதில், கன்னங்குறிச்சி பகுதியை சேர்ந்த பாலாஜி (40) மற்றும் அவரது மனைவி கீதா (39) ஆகியோரிடம் இருந்து கடந்த 2021ம் ஆண்டு ஒரு லட்சம் ரூபாயை 5 ரூபாய் வட்டிக்கு வாங்கினேன். அதற்கான தொகையை வட்டியுடன் கொடுத்துவிட்டேன். ஆனால், அசல் வட்டியுடன் 6 லட்சம் ரூபாய் தர வேண்டும் என பாலாஜி, கீதா தம்பதியர் மிரட்டுகின்றனர். ஆகவே இந்த கந்துவட்டி கொடுமையில் இருந்து போலீசார் என்னை காப்பாற்ற வேண்டும் என கூறியிருந்தார்.

    இதுகுறித்து விசாரித்த போலீசார் பாலாஜி, கீதா மீது அதிக வட்டி கேட்டு மிரட்டல் விடுத்தல் பிரிவில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    'ஆபரேஷன் கந்துவட்டி' திட்டத்தை அமல்படுத்த உத்தரவிட்டதையடுத்து, சேலத்தில் முதல் கந்து வட்டி வழக்கு தம்பதி மீது பாய்ந்துள்ளது.

    • மாவட்டத்தில் முதல்முறையாக கந்துவட்டி செலுத்த முடியாதவரிடம் இருந்து செல்போனை பறித்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
    • வேலூர் மாவட்டத்தில் கந்து வட்டி வசூல் செய்பவர்கள் தொடர்பாக புகார் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் கந்துவட்டி வசூலிப்பவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கந்துவட்டி கும்பல் குறித்து போலீசார் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்‌.

    இந்த நிலையில் மாவட்டத்தில் முதல்முறையாக கந்துவட்டி செலுத்த முடியாதவரிடம் இருந்து செல்போனை பறித்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    காட்பாடி காங்கேயநல்லூரை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 34).ஆட்டோ டிரைவர் இவர் கழிஞ்சூரை சேர்ந்த கார்த்தி என்பவரிடம் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ரூ 8,000 கடன் வாங்கியிருந்தார்.

    இந்த பணத்திற்கு வாரந்தோறும் ரூ.400 செலுத்த வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

    இந்த நிலையில் சுப்பிரமணியால் கடந்த 2 வாரமாக பணம் செலுத்த முடியவில்லை. இதனை தொடர்ந்து கார்த்தியின் உறவினர் விக்னேஷ் என்பவர் நேற்று சுப்பிரமணியிடம் பணம் கேட்டுள்ளார்.

    அப்போது பணம் இல்லாததால் சுப்பிரமணி வைத்திருந்த செல்போனை விக்னேஷ் பிடுங்கி சென்றுவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த சுப்பிரமணி இதுகுறித்து கந்துவட்டி கொடுமை செய்வதாக காட்பாடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து விக்னேஷை கைது செய்தனர்.

    வேலூர் மாவட்டத்தில் கந்து வட்டி வசூல் செய்பவர்கள் தொடர்பாக புகார் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மாநிலம் முழுவதும் கந்து வட்டி கும்பலை சேர்ந்தவர்கள் மீது போலீசார் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளனர்.
    • கந்து வட்டியால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    கடலூரை சேர்ந்த போலீஸ்காரர் செல்வகுமார் கந்துவட்டி கொடுமையால் தற்கொலை செய்து கொண்டார்.

    அனிதா என்ற பெண்ணிடம் வாங்கிய ரூ.3 லட்சம் கடனுக்காக அதிக அளவில் செல்வகுமார் வட்டி செலுத்திவிட்ட நிலையிலும் கந்துவட்டி பெண்ணான அனிதா தொடர்ந்து மிரட்டல் விடுத்து வந்ததாலேயே காவலர் செல்வகுமார் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து கந்துவட்டி வசூலித்த அனிதாவை போலீசார் கைது செய்தனர்.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் கந்துவட்டி கும்பல் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டி.ஜி.பி. சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.

    இதுதொடர்பாக அனைத்து போலீஸ் கமிஷனர்கள், சூப்பிரண்டுகள் மண்டல ஐ.ஜி.க்கள், டி.ஐ.ஜி.க்கள் ஆகியோருக்கு அவர் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    அனைத்து போலீஸ் கமிஷனர்கள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் ஆகியோர் 2003-ம் ஆண்டு கந்துவட்டி தடை சட்டத்தை உடனடியாக முழுமையாக செயல்படுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    நிலுவையில் உள்ள வழக்குகள் மாநிலம் முழுவதும் உள்ள போலீஸ் நிலையங்களில் நிலுவையில் உள்ள கந்துவட்டி புகார்கள் மற்றும் வழக்குகள் மீது உரிய விசாரணை நடத்த வேண்டும்.

    கந்துவட்டி கும்பலை சேர்ந்தவர்கள் பொது மக்களிடம் மிகுந்த வட்டி வசூலித்த தொகை எவ்வளவு என்பது பற்றி முறையாக விசாரிக்க வேண்டும். இதுதொடர்பாக உரிய சட்ட ஆலோசனைகளை பெற்று வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.

    கந்துவட்டிக்கு விடுபவர்கள் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தி அவர்கள் வைத்திருக்கும் கந்துவட்டி தொடர்பான ஆவணங்களை கைப்பற்ற வேண்டும். கையெழுத்து போடப்பட்ட வெற்று பேப்பர்கள், கையெழுத்திடப்பட்ட வெற்று காசோலைகள் மற்றும் அதுதொடர்பான ஆவணங்கள் இருந்தால் அவைகளை பறிமுதல் செய்ய வேண்டும்.

    கந்துவட்டி தொடர்பான இந்த நடவடிக்கைகளுக்கு 'ஆபரேஷன் கந்து வட்டி' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகளை போலீசார் திறம்பட வெற்றிகரமாக செயல்படுத்த வேண்டும்.

    கந்து வட்டி தொடர்பான நடவடிக்கைகளில் சிறப்பாக முன்மாதிரியாக பணியாற்றுபவர்களுக்கு அதற்குரிய அங்கீகாரம் தனித்தனியாக அளிக்கப்படும்.

    இவ்வாறு டி.ஜி.பி. சைலேந்திரபாபு தனது சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    இதனை தொடர்ந்து மாநிலம் முழுவதும் கந்து வட்டி கும்பலை சேர்ந்தவர்கள் மீது போலீசார் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளனர். கந்து வட்டியால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×